ADDED : ஜூலை 06, 2026 05:37 AM

மைல்கல்: மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. மார்ச்சில் பயன்பாட்டுக்கு வந்தது. பாலக்காடு ரோட்டில் மைல்கல் சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும். அதற்காக 300 மீட்டர் துாரத்துக்கு பாதாள சாக்கடை குழாய்களை மாற்றியமைக்க வேண்டியிருந்தது.
மூன்று மாதத்தில் பாலம் வேலை முடிக்கப்படும் என அப்போது உறுதி அளிக்கப்பட்டது. அவகாசம் முடிந்தும் இன்னும் முடியவில்லை. மைல்கல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள், சாலை மார்க்கமாக ரோட்டின் இருபுறமும் கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைத்து தர கோரினர். இதற்காக ரூ.7.5 கோடியை நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கியது. மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே சுரங்கப்பாதைக்கான வேலை துவக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து பாலக்காடு நோக்கிச் செல்வோரும், பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வருவோரும் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.
மேற்கு புறவழிச்சாலை அல்லது குனியமுத்துார் செல்ல நினைப்போர் சுரங்கப்பாதையை பயன்படுத்தலாம். இந்த வேலை இன்னும 6 மாதத்தில் முடியும் என்கின்றனர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.
