/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்டத்தில் மினி பஸ் இயக்கம் விரிவாக்கம் 85 புதிய வழித்தடத்துக்கு 900 விண்ணப்பம்
/
மாவட்டத்தில் மினி பஸ் இயக்கம் விரிவாக்கம் 85 புதிய வழித்தடத்துக்கு 900 விண்ணப்பம்
மாவட்டத்தில் மினி பஸ் இயக்கம் விரிவாக்கம் 85 புதிய வழித்தடத்துக்கு 900 விண்ணப்பம்
மாவட்டத்தில் மினி பஸ் இயக்கம் விரிவாக்கம் 85 புதிய வழித்தடத்துக்கு 900 விண்ணப்பம்
ADDED : மார் 20, 2025 11:28 PM
திருப்பூர் மாவட்டத்தில், 85 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க, 900 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. நேர்காணலில், 224 புதிய வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில், போதிய பஸ் வசதி இல்லாத பகுதிகளை இணைக்கும் வகையில், 85 புதிய வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்க முடிவு செய்து, அரசிதழ் வெளியிடப்பட்டது.
திருப்பூர் தெற்கு, காங்கயம் பகுதி அலுவலக எல்லையில், 17 வழித்தடங்கள், உடுமலையில், 22; தாராபுரத்தில், 17 என, மொத்தம் 85 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கப்பட உள்ளது.
புதிய வழித்தடங்களில் பஸ் இயக்க, மினி பஸ் உரிமையாளர்களிடமிருந்து, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மினி பஸ் உரிமையாளர்கள், சேவை கட்டணம் செலுத்தி, புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க விண்ணப்பித்துள்ளனர். மாவட்டம் முழுவதும், 85 வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்காக, 900 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கான வழித்தடம் ஒதுக்கீடு செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுமுன்தினம், மினி பஸ்களுக்கு புதிய வழித்தடம் ஒதுக்கீடு செய்ய கூட்டம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கிடுசாமி, பழனியப்பன், பாஸ்கர் ஆகியோர், விண்ணப்பங்களை சரிபார்த்து, வழித்தடம் ஒதுக்கீடு செய்தனர்.
நேற்றுமுன்தினம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்குவதற்கான ஒதுக்கீடு உத்தரவு அளிக்கப்பட்டது.
ஒரே வழித்தடம் கேட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட பஸ் உரிமையாளர்கள் விண்ணப்பித்திருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, வழித்தடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது
- நமது நிருபர் -.