/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய வழித்தடங்களில் மினி பஸ் துவக்கி வைப்பு
/
புதிய வழித்தடங்களில் மினி பஸ் துவக்கி வைப்பு
ADDED : அக் 25, 2025 12:27 AM

சூலுார்: சூலுாரில் இருந்து பல பகுதிகளுக்கு, மினி பஸ்கள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
சூலுார் - தென்னம் பாளையம், சூலுார் - கருமத்தம்பட்டி, சூலுார் - சோமனூர், சூலுார் - செரயாம்பாளையம், வதம்பச்சேரி - ஜல்லிப்பட்டி இடையிலான மினி பஸ்கள் உட்பட ஒன்பது வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
சூலுார் புது பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன், கொடியசைத்து, பஸ்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் மனோகரன், பேரூராட்சி தலைவர்கள் தேவி, புஷ்பலதா, துணைத்தலைவர் கணேஷ், ஒன்றிய செயலாளர் மன்னவன், மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சூலுாரில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு, மினி பஸ் வசதி துவக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

