/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதிகளில் வேகமெடுக்கும் மினி பஸ்கள்
/
குடியிருப்பு பகுதிகளில் வேகமெடுக்கும் மினி பஸ்கள்
குடியிருப்பு பகுதிகளில் வேகமெடுக்கும் மினி பஸ்கள்
குடியிருப்பு பகுதிகளில் வேகமெடுக்கும் மினி பஸ்கள்
ADDED : நவ 12, 2025 11:15 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் இருந்து இயக்கப்படும் சில மினி பஸ்கள், குடியிருப்பு பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படுகிறது.
பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நாட்டுக்கல்பாளையம், கள்ளிப்பாளையம், தொழில்பேட்டை, மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு பஸ் செல்லாத வழித்தடத்தில், குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் இந்த பஸ்சில் அதிகப்படியான மக்கள் பயணிக்கின்றனர். ஆனால், அவ்வப்போது, கலெக் ஷன் வேண்டி, அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இணையாக, மினி பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளில் வேகம் காட்டு மினி பஸ்களால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் பாதிக்கின்றனர். விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
மக்கள் கூறியதாவது:
கைகாட்டும் இடங்களில் எல்லாம் மினி பஸ் நிறுத்தப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, சில மினி பஸ்கள், அதற்கான வழித்தடத்தில் இயக்கப்படுவதும் கிடையாது. அவ்வப்போது, அதிவேகமாக இயக்கப்படும்போது, அச்சுறுத்தல் ஏற்படுகிறது. துறை ரீதியான அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபடும் மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

