தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'குறைந்தபட்ச பென்ஷன் அகவிலைப்படியுடன் வேணும்'

 'குறைந்தபட்ச பென்ஷன் அகவிலைப்படியுடன் வேணும்'

 'குறைந்தபட்ச பென்ஷன் அகவிலைப்படியுடன் வேணும்'


ADDED : ஜூன் 16, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: இ.பி.எப்., பென்ஷனர்கள் நலச்சங்கம், துடியலூர், ஆல் இந்தியா யுனைடெட் ஆக்சன் கமிட்டி சார்பில், மத்திய அரசைக் கண்டித்து இ.பி.எப்., மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. பென்ஷனர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

பார்லி நிலைக்குழு, பரிந்துரைத்த இடைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000 ஐ பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கருத் தில்கொண்டு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட செயலாளர் குமாரசாமி, துணைத் தலைவர் செல்லத்துரை, அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின் பி.எப்., கமிஷனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us