/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு நேரத்தை விட்டு விடுங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
/
விளையாட்டு நேரத்தை விட்டு விடுங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
விளையாட்டு நேரத்தை விட்டு விடுங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
விளையாட்டு நேரத்தை விட்டு விடுங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
ADDED : மார் 01, 2024 01:15 AM

கோவை:''விளையாட்டு கல்விக்கான நேரத்தை, கணித, அறிவியல் ஆசிரியர்கள் விட்டு விடுங்கள்,'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், 'நான்முதல்வன்' திட்டத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, கல்லுாரி களம் 2024 திட்ட துவக்க விழா, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு மாநில கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வரவேற்றார். அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், ''தமிழ்நாட்டில் உள்ள 12,600 பஞ்சாயத்துக்களுக்கு 86 கோடி ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை சேர்க்க, கருணாநிதி ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் துவக்கப்பட்டது. கிரிக்கெட், வாலிபால், சிலம்பம், புட்பால் உள்ளிட்ட 33 வகையான விளையாட்டுகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதமைச்சர், கல்வித்துறைக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். விளையாட்டு துறைக்கு வெறும் 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
உங்களிடம் நிதி கேட்கவில்லை. நான் கேட்பதெல்லாம் ஒன்று தான், ஆசிரியர்களிடம் கேட்பது, பள்ளிகளில் பி.டி., பீரியடுகளை கொடுத்து விடுங்கள்; கணித, அறிவியல் வகுப்புகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். விளையாட்டு துறை வளர்ச்சிக்கு, கிராமம் வரை சென்றடைய இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன,'' என்றார்.
விழாவில், மாவட்ட கலெக்டர் கிரந்திக்குமார் நன்றி கூறினார்.

