அமைச்சர் ஆய்வு எதிரொலி கைதி மருத்துவ பிரிவு ரெடி
அமைச்சர் ஆய்வு எதிரொலி கைதி மருத்துவ பிரிவு ரெடி
ADDED : ஜூன் 13, 2026 03:06 AM

கோவை: அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்ததன் எதிரொலியாக, கைதிகளுக்கான மருத்துவ பிரிவு, போலீசார் அறை புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன.
அரசு மருத்துவமனைக்குள் சிறை கைதிகளுக்கான சிகிச்சைக்கு 18 படுக்கை வசதிகள் மற்றும் காவலர்கள் ஓய்வெடுக்க பிரத்யேக அறை உள்ளது.
இக்கட்டடத்தின் சீலிங் விரிசல் விட்டதால், மழைக்காலங்களில் சிரமப்பட்டனர்.
கடந்த மாதம் அமைச்சர் சம்பத்குமார், அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது கைதிகள் பிரிவு, காவலர் ஓய்வறை ஆகியவை புதுப்பிப்பதாக அறிவித்தார். அதன்படி பொதுப்பணி துறை சார்பில், சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
போலீசார் கூறுகையில், 'மழைக்காலங்களில் தங்குவது சிரமமாக இருந்தது. அமைச்சர் பார்த்தபின், காவலர் ஓய்வறையின் கூரை புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. கூடுதல் கழிப்பறைகள் தேவைப்படுகின்றன' என்றனர்.
