UPDATED : ஆக 30, 2026 07:29 PM
ADDED : ஆக 30, 2026 07:21 PM
சூலூர்: சூலூர் குறுமைய தடகள போட்டிகளில், ஜி.ஆர்.டி., - சி.பி.எப்., பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
சூலூர் குறுமைய தடகள போட்டிகள், ஆர்.வி.எஸ்., கல்லூரியில் நடந்தது. இதில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், 100 மீ.,200 மீ., 400 மீ., மற்றும் 600 மீ., ஓட்டப்பந்தயங்களில், நீலம்பூர் ஜி.ஆர்.டி., - சி.பி.எப்., மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் தங்கம் வென்றனர்.
இதேபோல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல தடகள போட்டிகளில், வெற்றி பெற்று பதக்கங்களை குவித்தனர். மொத்தம், 252 புள்ளிகளை பெற்று, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை இப்பள்ளி பெற்றது. பதக்கங்களை குவித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
