தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கட்டுமானத்தில் சிறு தவறும் சிக்கல் ஏற்படுத்தும்: கோவை புது வீட்டில் அடுக்கடுக்காக அதிர்ச்சி

கட்டுமானத்தில் சிறு தவறும் சிக்கல் ஏற்படுத்தும்: கோவை புது வீட்டில் அடுக்கடுக்காக அதிர்ச்சி

கட்டுமானத்தில் சிறு தவறும் சிக்கல் ஏற்படுத்தும்: கோவை புது வீட்டில் அடுக்கடுக்காக அதிர்ச்சி


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்டுமானத்தில் ஏற்படும் சிறிய தவறும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை விளக்குகிறது, கோவையில் நடந்த உண்மை சம்பவம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீட்டின் மேல் தளத்தின் பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

வீடு கட்டிய பொறியாளர் பார்வையிட்டு, இது சாதாரண விரிசல் என்றுகூறி வலை வைத்து சரி செய்யுமாறு கூறியுள்ளார். விரிசல் பெரிதாகிக்கொண்டே சென்று, ‘போர்டிகோ’வின் ‘ரூப் ஸ்லாப்’ நடுப்பகுதியில் பெரிதாகியுள்ளது.

மீண்டும் பொறியாளர் அந்த விரிசலின் அடிப்பகுதியில் இரண்டு இரும்பு பீம் அமைத்துக்கொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனாலும், விரிசல் பெரிதாகி முதல் தளத்தின் டைல்ஸ் விரிசல் விட்டு மேல் எழும்பி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், மனவேதனையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மற்றொரு பொறியாளரின் ஆய்வில், போர்டிகோ ஸ்லாபின் மேல் பகுதியில், கீழுள்ள படுக்கை அறையை(10X16) அகலப்படுத்தி, மேலே உள்ள படுக்கையறையை(16x16) பெரிதாக்கி, அதன் வெளிப்புறம் 9 இன்ச் செங்கல் சுவர் போர்டிகோவின் ரூப் ஸ்லாப்பின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டது தெரியவந்தது.

அந்த சுவற்றின் அடிப்பகுதியில் எவ்வித பீமோ, அதை தாங்கும் காலமோ இல்லை. இதனால் மேல் தளத்தில் உள்ள அனைத்து எடையும், போர்டிகோ ஸ்லாப்பின் நடுப்பகுதியில் சென்று, அந்த ஸ்லாப் வலுவிழந்து பாதிப்படைந்துள்ளது.

அடுத்ததாக பக்கவாட்டு சுவரில் ஏற்பட்ட விரிசலை பரிசோதித்தபோது அருகில் இருந்த காலம் வலுவிழந்து காணப்பட்டது.

பவுண்டேஷன் வரை பூமிக்கு அடியில் தோண்டி பார்த்தபொழுது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காலம் பகுதியில் பீம் போடும்போது காலம் மேற்புறத்தில், மண் சுமார் 3 இன்ச் கனம் படிந்திருந்தது.

அதனை சுத்தம் செய்யாமல் ‘எர்த் பீம்’ போட்டுள்ளனர். இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த வெற்றிடத்தின் மூலம் காலம், பீம் இரண்டுமே இறங்கி இருப்பது தெரியவந்தது.

மூன்றாவதாக, ஒரு சுவரின் விரிசலை சரி செய்ய முயன்றபோது அந்த காலத்தில் பூமிக்கு அடியில் தோண்டியபோது மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.

பூமிக்கு அடியில் உள்ள காலம் அளவு 9x9 இன்ச் ஆக இருந்தது. எர்த் பீம் மட்டத்திற்கு மேல் அதே காலத்தை 9x12 இன்ச் என்ற முறையில் காலம் போட்டுள்ளனர். அளவு வேறுபாடு காரணமாக காலம் வலுவிழந்து சுவர் விரிசல் ஏற்பட்டது.

தற்போது, ரெட்ரோ முறையில் வலுவிழந்த கான்கிரீட் காலம், பீம் சிலாப் போன்றவை சரி செய்யப்பட்டுள்ளது.

எனவே வீட்டு உரிமையாளர்கள் வீடு கட்டுவதற்கு முன் மிகவும் கவனமாகவும், அதேசமயம் அனுபவமுள்ள ஒரு நபரை தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

இத்தகவலை, கோவை மண்டல கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு(கிரிக்) மாநில இணை செயலாளர் ராஜதுரை தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us