UPDATED : நவ 11, 2026 04:06 PM
ADDED : நவ 11, 2026 04:04 PM

அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் ஒன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி. உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.
சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியினர் 50 ஓவரில் 309 ரன் எடுத்தனர். மிதுன் 152, முகேஷ் 72, யுவராஜ் 35 ரன் எடுத்தனர். எதிரணியின் தினேஷ் 4 விக்கெட் வீழ்த்தினார். எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் 50 ஓவரில் 256 ரன் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தனர். ஹாசிப் 58, சத்தியநாராயணன் 43, ஹூசெபா 43 ரன் எடுத்தனர்.
