/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., திட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்

ADDED : பிப் 22, 2024 10:50 PM
பொள்ளாச்சி:'பி.ஏ.பி., திட்ட பாசன கால்வாய்கள் பராமரிப்பு மற்றும் சொட்டு நீர் பாசன முறைக்கான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,' என, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தெரிவித்தார்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், ஆழியாறு, பாலாறு படுகைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைகளில் தேக்கப்படும் தண்ணீர், ஆழியாறு, திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்பட்டு, பாசனத்துக்கு வழங்கப்படுகிறது.
இத்தில், ஆழியாறு படுகை, பாலாறு படுகையில் கால்வாய் அமைத்து, விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கால்வாய்கள் புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து சட்டசபையில் பேசியதுடன், கால்வாய் புனரமைப்பு மற்றும் பி.ஏ.பி., திட்டத்தில் இஸ்ரேல் தொழில்நுட்ப திட்டம் செயல்படுத்த வேண்டும் என, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயரமான் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், விவசாய பாசனத்துக்கு இஸ்ரேல் முறையில் சொடடுநீர் பாசன முறை செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
அதில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பி.ஏ.பி., திட்ட பாசன கால்வாய்கள் புனரமைத்தல் மற்றும் தானியங்கி நீர் மேலாண்மைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்வதற்காக, 7.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசால் ஆய்வுப் பணிகள் செயலாக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீர்வளத்துறை அமைச்சர் இத்திட்டம் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் இத்திட்டம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., திட்டத்தில் சொட்டுநீர் பாசன முறையை அமல்படுத்தினால், பாசன பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும். நீர் வீணாவதும், முறைகேடாக எடுப்பதும் தடுக்கப்படும்.
மேலும், பி.ஏ.பி., திட்டத்தில் நிலுவையில் உள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டி, கூடுதல் நீர் பெறுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.