‘எம்.எல்.ஏ.,ஆபீசில் அளிக்கும் மனுக்களுக்கு 15 நாளில் தீர்வு’
‘எம்.எல்.ஏ.,ஆபீசில் அளிக்கும் மனுக்களுக்கு 15 நாளில் தீர்வு’
ADDED : ஆக 23, 2026 02:40 PM
அ நிறம் | அளவு
வடவள்ளி:
த.வெ.க., அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடவள்ளியில் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இது போல் ராஜவீதி, தேர்நிலைத்திடல் மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 100 நாள் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், வடக்கு சட்டசபை தொகுதி அலுவலகம் ஆண்டு முழுவதும் திறந்து இருக்கும். அங்கு கொடுக்கும் மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், என்றார்.
