/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.எம்.எஸ்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
எம்.எம்.எஸ்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 18, 2025 10:50 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோபாலபுரம் சுங்கம், முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் பள்ளி (எம்.எம்.எஸ்.,) 10 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவி அனன்யா, 492 மதிப்பெண் பெற்று முதலிடமும், தன்யஸ்ரீ மற்றும் வர்ஷா ஆகியோர் தலா 488 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், பூஜா மற்றும் வர்ஷினி ஆகியோர் தலா, 486 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடமும் பெற்றனர். அறிவியலில், 6 மாணவிகளும்; சமூக அறிவியலில், 5 மாணவிகளும் 'சென்டம்' பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வில், மாணவி சங்கரி 565 மதிப்பெண் பெற்று முதலிடமும், பிரதன்யா 532 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், கபிலா 531 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தாளாளர் மனோகரன், செயலாளர் விஜயலட்சுமி, முதல்வர் கிரிஜா கார்த்திகேயன், பொருளாளர் ப்ரியவீணா செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.