/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல் போனில் இயக்கும் பம்ப் செட்; வாங்க மானியம்
/
மொபைல் போனில் இயக்கும் பம்ப் செட்; வாங்க மானியம்
ADDED : டிச 29, 2024 06:30 AM
கோவை: கோவை மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மொபைல் போன் மூலம் பம்ப் செட் இயக்கும் கருவி வாங்க, மானியம் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர், பழங் குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஏழாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில், 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள், கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள், வட்டார உதவி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.