sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறைந்த செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பதில்...முன்மாதிரி கிராமம்: துர்நாற்றம் இல்லை, சூழலுக்கு பாதிப்பில்லை

/

குறைந்த செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பதில்...முன்மாதிரி கிராமம்: துர்நாற்றம் இல்லை, சூழலுக்கு பாதிப்பில்லை

குறைந்த செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பதில்...முன்மாதிரி கிராமம்: துர்நாற்றம் இல்லை, சூழலுக்கு பாதிப்பில்லை

குறைந்த செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பதில்...முன்மாதிரி கிராமம்: துர்நாற்றம் இல்லை, சூழலுக்கு பாதிப்பில்லை

1


ADDED : பிப் 25, 2026 06:22 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்: குறைந்த செலவில், கழிவு நீரை சுத்திகரித்து, மரங்களை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் பொன்னாண்டாம்பாளையம் கிராமம், மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.

சூலுார் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொன்னாண்டாம்பாளையம். சுமார், 300 குடியிருப்புகள் உள்ளன.

அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள இக்கிராமத்தில், சாக்கடை வழியாக கழிவு நீர் முறையாக வெளியேறாமல் தேங்கி நின்றது.

தேங்கும் கழிவு நீரால், துர்நாற்றம் மற்றும் நோய் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகினர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் வலியுறுத்தினர்.

ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து வார்டு உறுப்பினர் சிவக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உருவானதுதான் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம். வீடுகளில் உருவாகும் கழிவு நீரை, சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து சுத்திகரித்து, மரங்களை வளர்கவும், எஞ்சியுள்ள நீரை குட்டையில் சேமிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

உருவானது திட்டம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ஊராட்சிக்கு சொந்தமான, ஒன்றரை ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, கழிவு நீரை தேக்கி சுத்திகரிக்க வசதியாக, மூன்று அடி ஆழம், 20 அடி அகலம், 60 அடி நீளத்துக்கு குழி தோண்டப்பட்டது.

அதில், கழிவு நீரை கொண்டு வரவும் சுத்திகரித்து மரங்களுக்கு விடவும், உபரி நீர் தானாக குட்டைக்கு செல்லும் வகையில் பைப்புகள் அமைக்கப்பட்டன.

முயற்சிக்கு கிடைத்த வெற்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த மினி சுத்திகரிப்பு நிலையம் தடங்கல் இன்றி செயல்பட்டு வருவது, புதிய சிந்தனை மற்றும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

சுத்திகரிப்பு நிலையத்தை பராமரித்து வரும் முன்னாள் வார்டு உறுப்பினர் சிவக்குமார் கூறியதாவது:

ஊரில் கழிவு நீர் தேங்குவது மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் ஆபத்தானது. பெரும்பாலான ஊர்களில் உருவாகும் கழிவு நீர், நீர்நிலைகளுக்கு நேரடியாக சென்று தேங்குவது வழக்கம். எங்கள் ஊரில் அப்படி செய்யக்கூடாது என, முடிவு செய்து, கழிவு நீரை சுத்திகரித்து, குட்டைக்கு அனுப்ப திட்டமிட்டோம்.

ஊராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், தனியார் பங்களிப்புடன், உள்ளூர் மக்களின் ஆதரவோடு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தோம். 120 வீடுகளில் உருவாகும் கழிவு நீரை ஊருக்குள், 10 அடி ஆழமுள்ள, நிலமட்ட தொட்டிக்கு கொண்டு வந்து, அதில் இருந்து மோட்டார் மூலம், சுத்திகரிப்பு நிலையத்துக்கு பம்ப் செய்கிறோம். நிலையத்தில் சேகரமாகும் கழிவு நீரில், கம்ப்பிரஷர் வைத்து ஆக்சிஜனேற்றம் செய்கிறோம். ஆக்சிஜன் கழிவு நீருக்குள் சேர்வதால், நுண்ணுயிரிகள் இறப்பதில்லை. அதனால், கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதில்லை.

தினமும், 10 ஆயிரம் லிட்டர் கழிவு நீர் வருகிறது. அது அப்படியே சுத்திகரிக்கப்படுகிறது. அதை டேங்கில் ஏற்றி, மரங்களுக்கு சொட்டு நீர் பாசனம் செய்கிறோம். உபரி நீர் தானாக வெளியேறி, குட்டைக்கு, குழாய் வழியாக செல்கிறது.

ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மின் மோட்டார்கள், டேங்க், குழாய்கள் பதித்தல் உள்ளிட்ட செலவுகள் ஊராட்சி மூலம் செய்யப்பட்டது. மோட்டார்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணமும் குறைந்த அளவே வருகிறது. மற்ற கிராமங்களுக்கு முன் மாதிரியாக இத்திட்டத்தை எங்கள் ஊரில் செயல்படுத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us