/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீரற்ற இதயத் துடிப்பு நோய் குணப்படுத்த நவீன கருவி
/
சீரற்ற இதயத் துடிப்பு நோய் குணப்படுத்த நவீன கருவி
ADDED : ஜன 04, 2024 12:30 AM
கோவை, : கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், சீரற்ற இதயத் துடிப்பு நோய் சிகிச்சைக்காக, 'என்சைட் எக்ஸ்' என்ற அதிநவீன மருத்துவக் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிமுக விழாவில் பேசிய, கே.எம்.சி.எச்., தலைவர் நல்ல பழனிசாமி, ''மிகச்சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க, புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறோம்.
என்சைட் எக்ஸ் என்ற இந்த கருவி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, கே.எம்.சி.எச்.,ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீரற்ற இதயத் துடிப்பை விரைவாகவும், துல்லியமாகவும் கண்டறிந்து சிகிச்சை அளித்திட, மருத்துவர்களுக்கு இந்தக்கருவி உதவும்,'' என்றார்.
கே.எம்.சி.எச்., இதய துடிப்பு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறுகையில், '' இந்த நவீன கருவி, இதயத் துடிப்பை துல்லியமாகக் கணிக்கக்கூடியது. இதயத்தை முப்பரிமாண கோணத்தில் காட்சிப்படுத்தி, நோய் எங்கிருந்து உருவாகிறது என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும். சிகிச்சைக்கான நேரமும் குறைகிறது,'' என்றார்.