தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மோடி பிறந்த நாள் விழா  பா.ஜ., கொண்டாட்டம்

மோடி பிறந்த நாள் விழா  பா.ஜ., கொண்டாட்டம்

மோடி பிறந்த நாள் விழா  பா.ஜ., கொண்டாட்டம்


ADDED : செப் 17, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின், 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நகர ஒருங்கிணைப்பாளர் மணிகண்டகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் துரை, மாவட்ட அயலக பிரிவு தலைவர் அருண்பிரசாத் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் நடந்த ரத்த தான முகாமில், பா.ஜ., நகர நிர்வாகிகள் ரத்த தானம் வழங்கினர். மாவட்ட ஆன்மிக பிரிவு செயலாளர் ஜெகதீஸ்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் வடிவேல், நகர முன்னாள் தலைவர் கோகுல்குமார் பங்கேற்றனர்.

* வால்பாறையில் நடந்த விழாவுக்கு, மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் நீடுழி வாழ வேண்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

கோவை தெற்கு மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மண்டல் பொதுசெயலாளர் முகேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகவள்ளி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us