/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருகும் தற்காலிக இறைச்சி கடைகள் கண்காணிப்பு அவசியம்
/
பெருகும் தற்காலிக இறைச்சி கடைகள் கண்காணிப்பு அவசியம்
பெருகும் தற்காலிக இறைச்சி கடைகள் கண்காணிப்பு அவசியம்
பெருகும் தற்காலிக இறைச்சி கடைகள் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜன 02, 2025 12:20 AM
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி நகரின் சுற்றுப்பகுதியில், ரோட்டோரங்களில் தற்காலிக இறைச்சி கடைகள் பெருகி சுகாதாரம் பாதிக்கிறது.
பொள்ளாச்சி நகரில் நிலவும், சுத்தமான காற்று, தண்ணீர் வசதி போன்றவற்றை கருத்தில் கொண்டு, பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலரும், இங்கு குடியேறி வருகின்றனர். இதனால், நகரின் சுற்றுப்பகுதியில் குடியிருப்புகள், வணிகக் கடைகள் பெருகி வருகின்றன.
குறிப்பாக, நகரில் இருந்து செல்லும் வழித்தடங்களில், ரோட்டோரத்தில் கடைகள் அமைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதான ரோட்டோரங்களில், திடீரென இறைச்சி கடைகள் முளைத்து விடுகின்றன.
அதிலும், மீன் கடைகள் அதிரித்து காணப்படுகின்றன. விற்று முடிந்ததும், அதன் கழிவுகளை அருகில் உள்ள கால்வாய் அல்லது ரோட்டில் கொட்டிச் செல்கின்றனர். அவற்றில் இருந்து ஈக்கள் பரவி, நோய் பரவலுக்கு வழிவகுக்கிறது; துர்நாற்றமும் வீசுகிறது.
அதிலும், சிலர், ரோட்டோர கடைகளை தற்காலிகமாக அமைப்பதுபோல், ரகசியமாக கட்டடம் எழுப்பவும் முற்படுகின்றனர். பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், இத்தகைய தற்காலிக கடைகளைக் கண்டறிந்து, முன்கூட்டியே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமைகளில், ரோட்டோரங்களில் முளைக்கும் தற்காலிக இறைச்சி கடைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ரோட்டோரத்திலும், ஓடையை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில், துவக்கத்தில் தென்னை ஓலை, ஓடு கொண்டு தற்காலிக கடை அமைக்கப்படுகிறது.
அதன்பின், ஹாலோபிளாக் கற்கள் கொண்டு, சுவர் அமைத்து நிரந்தர கடையாகவும் மாற்ற முற்படுகின்றனர். இதை தடுக்க, ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில், பிரதான ரோடுகளில் உள்ளாட்சி அதிகாரிகள் வலம் வந்து, இறைச்சி, மீன் விற்போரை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.