/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிமாநில நபர்கள் நடமாட்டம் கண்காணிப்பு
/
வெளிமாநில நபர்கள் நடமாட்டம் கண்காணிப்பு
ADDED : டிச 19, 2025 05:05 AM
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, வாகன தணிக்கை, இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநில நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறுகையில், மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொழிலுக்காக, வியாபாரத்திற்கு வரும் வெளிமாநில நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவர்களை இங்கு வேலைக்கு அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்களில் உள்ள மனித வள மேலாண்மைத் துறை அதிகாரிகள், உரிமையாளர்கள் ஆகியோரிடம் இருந்து வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பெறுகிறோம்.
'வேலைவாய்ப்புக்காக இங்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள், நன்கு பணி புரிந்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. தங்களது வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் யாரவது தவறு செய்தால் கூட உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்' என அவர்களது இருப்பிடங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது அறிவுறுத்தி வருகிறோம், என்றார்.
----

