/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவ மழை எதிரொலி; பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்படுத்த அறிவுரை
/
பருவ மழை எதிரொலி; பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்படுத்த அறிவுரை
பருவ மழை எதிரொலி; பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்படுத்த அறிவுரை
பருவ மழை எதிரொலி; பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்படுத்த அறிவுரை
ADDED : அக் 21, 2025 10:15 PM
பெ.நா.பாளையம்: பருவ மழையையொட்டி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக பள்ளி வளாகத்தில் ஏதேனும் ஒரு வகுப்பறை பாதிக்கப்பட்டு இருப்பின், அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்று சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். சுற்று சுவர்களில் இருந்து, 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் எவரும் சுவர் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர் தேக்க தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என, அவ்வப்போது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில் கட்டட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களின் அருகில் மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளுக்கு அருகில் செல்வதையும், அவற்றில் குளிப்பதையும் தவிர்த்திட அறிவுரைகள் வழங்க வேண்டும்.
மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்படவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால், அவைகளின் அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.