தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 10க்கு பின் பருவ மழை விலகும்

10க்கு பின் பருவ மழை விலகும்

10க்கு பின் பருவ மழை விலகும்


ADDED : ஆக 31, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் மழைப்பொழிவு இல்லை. குடிநீருக்காக சிறுவாணியில் 6 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது. சிற்றருவிகளில் நீர் வரத்து இருந்ததால், 29.58 அடியாக அணை நீர் மட்டம் உயர்ந்தது. தென்மேற்கு பருவ மழை இம்மாதம் இறுதி வரை பெய்யுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியது:

இம்மாதம் தென்மேற்கு பருவ மழை பலவீனமாகவே இருக்கும்.வரவிருக்கும் நாட்களில் கொங்கு மண்டலத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம்; பரவலாக பெய்யாது.

காற்றோட்டத்தால் கோவை நகர், பாலக்காட்டு கணவாய் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு மிக குறைவு. செப்டம்பர் 10க்குபின் பருவ மழை விலகத் துவங்கும். அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் துவங்கும்; 2வது வாரத்தில் நல்ல மழை எதிர்பார்க்கலாம். உச்சகட்ட மழை பொழியும் மாதமாக நவம்பர் இருக்கும்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us