/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதி இல்லாத முடீஸ் பஸ் ஸ்டாண்ட்
/
அடிப்படை வசதி இல்லாத முடீஸ் பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஜன 16, 2026 05:50 AM

வால்பாறை: முடீஸ் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் பஜார். இந்த பகுதியை சுற்றிலும் கெஜமுடி, நல்லமுடி, தோணிமுடி, முத்துமுடி, தாய்முடி, ஆனைமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்கள் உள்ளன.
முடீஸ் பஜார் பகுதிக்கு வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நாள் தோறும், பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வந்து செல்லும் அளவுக்கு பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் அமைந்துள்ளதாலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
முடீஸ் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தக்கோரி, கடந்த, 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பஸ் ஸ்டாண்ட் குறுகலாக உள்ளதால், பயணியர் திறந்தவெளியில் பல மணி நேரம் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
இதே போல், முடீஸ் பஜாரில் கழிப்பிட வசதியும் இல்லை. நகராட்சி அதிகாரிகளும் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை காலம் துவங்கும் முன், பஸ் ஸ்டாண்டை நகராட்சி சார்பில் விரிவுபடுத்தி போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

