/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் உரிமைத்தொகை கோரி கோவையில் அதிக மனுக்கள்
/
மகளிர் உரிமைத்தொகை கோரி கோவையில் அதிக மனுக்கள்
ADDED : ஜூலை 24, 2025 12:06 AM
கோவை; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப் பணிகள் குறித்து கோவை கலெக்டருடன், காணொலியில் மருத்துவமனையில் இருந்தவாறு நேற்று ஆய்வு செய்தார்.
கோவை கலெக்டருடன் பேசிய முதல்வர், 'இதுவரை நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்களில் எந்த மனுக்கள் அதிகம் வந்துள்ளன?, மனுக்கள் அளிக்க வரும் மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? ஆகிய கேள்விகளை எழுப்பினார்.
அப்போது, கோவை கலெக்டர் கூறியதாவது: இதுவரை, 30 முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் மகளிர் உரிமைத்தொகை வேண்டி, அதிக மனுக்கள் வந்துள்ளன. தவிர, 5,000 மனுக்கள் பட்டா, பட்டா மாறுதல் தொடர்பாக பெறப்பட்டுள்ளன.
மீத மனுக்கள் மாநகராட்சி, நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரியில் பெயர் மாற்றம், புதிய மின் இணைப்புகள் வேண்டி வந்துள்ளன. மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை அடுத்து பட்டா சார்ந்து அதிக மனுக்கள் வந்துள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து, மனுக்கள் அளிக்க வந்த பயனாளிகளின் கோரிக்கை விபரங்கள் கேட்டறிந்த முதல்வர், பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

