/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்
/
சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்
சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்
சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்
ADDED : செப் 30, 2025 12:52 AM

சாக்கடையை அடைக்கின்றனர்
சிறுவாணி மெயின் ரோடு, காளம்பாளையம், காந்தி காலனியில், வீட்டின் உரிமையாளர்கள் ஆங்காங்கே சாக்கடையை அடைத்து வைக்கின்றனர். இதனால், கழிவுநீர் தேங்கி கொசு மற்றும் பூச்சித்தொல்லைகள் அதிகமாக உள்ளன. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசுகிறது.
- ரெஜி, காளம்பாளையம்.
தினமும் நடக்கும் விபத்து
கோவை மாநகராட்சி, 83வது வார்டு, பிஷப் அப்பாசாமி கல்லுாரி ரோட்டில் ஆங்காங்கே குழிகள் உள்ளன. சாலையில் நீளமாக உள்ள குழிகளால், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தினமும் இப்பகுதியில் சிறு விபத்துகள் நடக்கின்றன.
- பாலா, 83வது வார்டு.
உடைந்த சிலாப்பால் விபத்து சொக்கம்புதுார், 77வது வார்டு, அய்யாவு பன்னடி தெருவில் பல இடங்களில், சாக்கடை சிலாப் உடைந்துள்ளது. திறந்தநிலை சாக்கடைகளில் குழந்தைகள், பெரியவர்கள் விழ வாய்ப்புள்ளது. விபத்துகள் நடக்கும் முன், சிலாப்பை சரிசெய்ய வேண்டும்.
- கார்த்திக், சொக்கம்புதுார்.
மண் சாலையால் அவதி
கலிக்கநாயக்கன்பாளையம், சி.பி.சி., கார்டன், பேஸ் - 3ல் இதுவரை தார் சாலை வசதி அமைக்கவில்லை. மழைக் காலத்தில் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். எவ்வளவு கோரிக்கை வைத்தும் தார் சாலை அமைக்கவில்லை.
- சங்கர், சி.பி.சி., கார்டன்.
தண்ணீரின்றி தவிப்பு
மாநகராட்சி, 56வது வார்டு, நேதாஜிபுரம் பகுதியில் போர் மோட்டார், கடந்த ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக உப்பு தண்ணீர் விநியோகிக்கவில்லை. குடியிருப்புவாசிகள் போதிய தண்ணீரின்றி அவதிக்குள்ளாகின்றனர்.
- செல்வராஜ், நேதாஜிபுரம்.
ஆறு விளக்குகளும் பழுது
மருதமலை ரோடு, வேளாண் பல்கலை அடுத்து சீரநாயக்கன்பாளையம் வழியாக கரும்பு இனப்பெருக்க ஊரய்ச்சி நிலையம் செல்லும் பாதையில், ஒரு மாதத்திற்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. ஒன்று முதல் ஆறு வரையுள்ள கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை.
- விஜய், சீரநாயக்கன்பாளையம்.
இருளால் பாதுகாப்பில்லை
மாநகராட்சி, 40வது வார்டு, ஐயர் காலனி போகும் பகுதியில் உள்ள தெருவிளக்குகள், பல நாட்களாக எரிவதில்லை. இரவில் இப்பகுதியில் செல்லவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தெருவிளக்கு பழுது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- விநாயகமூர்த்தி, 40வது வார்டு.
பள்ளத்தை மூடுங்க
மருதமலை ரோடு, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம் அருகே சாலையோரம் 10 அடிக்கு மேல் பெரிய பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். நடந்து செல்வோருக்கும் இந்தப்பள்ளம் அபாயகரமானதாக உள்ளது.
- லெனின், மருதமலை ரோடு.
சாலையில் இறைச்சிக்கழிவு
சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, 14வது வார்டு, இடையர்பாளையம் செல்லும் சாலையில் தொடர்ந்து குப்பை, இறைச்சிக்கழிவு கொட்டப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. கழிவு கொட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.
- பார்த்தசாரதி, சிக்கதாசம்பாளையம்.
மிரட்டும் நாய்கள்
கோவைப்புதுார், 90வது வார்டு, தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்கின்றன. வாகனங்களில் செல்வோர், சாலையில் நடந்து செல்வோரைத் துரத்தி மிரட்டுகின்றன.
- பாலாஜி, கோவைப்புதுார்.