ADDED : பிப் 07, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை நகரில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தவிர சுற்றுலா பயணியர் தங்கி செல்ல வசதியாக, தங்கும் விடுதிகளும் அதிக அளவில் உள்ளன. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசு மருந்து அடித்து கட்டுப்பாடு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் துவங்கவில்லை.
பொதுமக்கள் கூறியதாவது:
நகரில் பல்வேறு இடங்களில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால், மக்களுக்கு வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறி னர்.

