/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே நாளில் அதிகளவு சர்வதேச பயணிகள்; கோவை விமான நிலையத்தில் பதிவு
/
ஒரே நாளில் அதிகளவு சர்வதேச பயணிகள்; கோவை விமான நிலையத்தில் பதிவு
ஒரே நாளில் அதிகளவு சர்வதேச பயணிகள்; கோவை விமான நிலையத்தில் பதிவு
ஒரே நாளில் அதிகளவு சர்வதேச பயணிகள்; கோவை விமான நிலையத்தில் பதிவு
ADDED : நவ 05, 2024 11:25 PM

கோவை; கோவை விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிகளவு சர்வதேச பயணிகள் வந்து சென்றனர்.
அக்., மாதம் முதல், தினமும், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த, 3ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக, 64 விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தலா, 32 வருகை புறப்பாடு அடங்கும். ஒரே நாளில், 4,629 பயணிகள் வருகை, 5,261 பயணிகள் புறப்பாடு என, 9,890 பயணிகள் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
28 உள்நாட்டு விமானங்கள் வந்து சென்ற நிலையில், நான்கு சர்வதேச விமானங்கள் வந்து சென்றன.இதில், ஒரே நாளில் அதிகபட்ச சர்வதேச பயணிகள் எண்ணிக்கை பதிவானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இன்டிகோ நிறுவனம் அபுதாபி, சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்கியது, சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்கு காரணம். கோவைக்கு, 68 சதவீத சர்வதேச பயணிகள் வந்த நிலையில், இங்கிருந்து, 89 சதவீத பயணிகள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சரக்கு போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இது மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.