/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளிடம் இருந்து குழந்தையுடன் தப்பிய தாய்
/
யானைகளிடம் இருந்து குழந்தையுடன் தப்பிய தாய்
ADDED : ஆக 16, 2025 11:40 PM

வால்பாறை; வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. வீடு மற்றும் கடைகளை இடித்து யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அக்காமலை எஸ்டேட், 21ம் பாடி தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள், கண்மணி என்ற தொழிலாளியின் வீட்டின் முன்பக்கத்தை இடித்தன.
யானைகளின் சப்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த கண்மணி, இரண்டு மாத கைக்குழந்தையுடன் பின் பக்கம் வழியாக வெளியேறி, அருகில் இருந்த தொழிலாளியின் குடியிருப்பில் தஞ்சமடைந்து உயிர்தப்பினார்.
அந்தப்பகுதியில் இரவு முழுவதிலும் முகாமிட்ட யானைகள், மீசைபெருமாள், நல்லதம்பி ஆகியோரின் வீடுகளையும் இடித்து சேதப்படுத்தின. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து கனமழை பெய்யும் நிலையில், யானைகளும் இரவு நேரத்தில் முகாமிடுவதால் தொழிலாளர்கள்பீதியில் உள்ளனர்.