sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம்! டாக்டர்கள் விழிப்புணர்வு

/

தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம்! டாக்டர்கள் விழிப்புணர்வு

தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம்! டாக்டர்கள் விழிப்புணர்வு

தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம்! டாக்டர்கள் விழிப்புணர்வு


ADDED : ஆக 01, 2025 07:22 PM

Google News

ADDED : ஆக 01, 2025 07:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; 'தாய்மார்கள், தாய்ப்பால் தானமாக கொடுக்க முன்வரலாம். வீண் பயங்கள் வேண்டாம்,' என, தாய்மார்களிடம், டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தாய்ப்பால் வங்கி கடந்த, 2020ல் துவங்கப்பட்டது. இங்கு சேகரிக்கப்படும் தாய்ப்பால், குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த, 2021- 22 ஆண்டில், 321 லிட்டர் தாய்ப்பாலும், கடந்த, 2023 - 24ம் ஆண்டு, 362 லிட்டரும் பெறப்பட்டது. தாய்மார்கள் முன்வந்து தாய்ப்பால் தானம் வழங்க வேண்டுமென டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

சீம்பால் குழந்தையின் முதல் உணவு மற்றும் முதல் தடுப்பு மருந்தாகும். அது குழந்தையின் உயிர் காக்கும். குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவாகும். ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறுகளை தடுக்கிறது.

தாய்ப்பால் இயற்கையான, எளிமையான ஊட்டச்சத்துள்ள நோய் தடுப்பு சக்தி உள்ள உணவாகும். தாய்க்கும், குழந்தைக்கும் இடையே பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. அடுத்த குழந்தை பிறப்பினை தள்ளி போட உதவுகிறது. தாய்க்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்க உதவுகிறது.

குழந்தைக்கு பிற்காலத்தில் ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி, இருதநோய் வரும் வாய்ப்பை குறைக்க உதவுகிறது. இரண்டு கிலோவுக்கும் குறைவான எடையுடன் பிறந்த குழந்தைக்கும், தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் கிடைக்கும்.

தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்படுகிறது. புட்டிபால் கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.

மேலும், தாய்ப்பால் தானம் பெறப்படுகிறது. தன் குழந்தைக்கு போக பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தாய்ப்பால் அருந்த இயலாத குழந்தையின் தாய்மார்கள், நோய் தொற்று இல்லாத ஆரோக்கியமான தாய்மார்கள், தாய்ப்பால் தானமாக தரலாம்.

எச்.ஐ.வி., எச்.சி.வி., எச்.இ.பி.பி., நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார்கள், மார்பக தொற்று நோய், கீமோதெரபி சிகிச்சை எடுக்கும் தாய்மார்கள், தாய்பால் தானம் தரக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்., மாதம் முதல் மார்ச் 31ம் தேதி வரை தாய்ப்பால் தானம் குறித்து, 2,538 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், 390 பேர், 74.55 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கினர். இதில், 509 குழந்தைகள் பயன்பெற்றன.

ஏப்., முதல் கடந்த, 30ம் தேதி வரை, 666 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 102 பேர், 15.25 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கினர், 109 குழந்தைகள் பயன்பெற்றன.

தாய்ப்பால் தானம் கொடுப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. ஒரு சிலரிடம் தாய்ப்பால் தானமாக கொடுத்தால் தங்களது குழந்தைகளுக்கு கிடைக்காது என நினைக்கின்றனர். அதுபோன்று இல்லை, தாய்ப்பால் கொடுப்பதால் அதிகம் சுரக்கும். வீண் பயம் வேண்டாம்.

தானமாக கொடுக்கும் தாய்ப்பால், தாய்பாலின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு உயிர் காக்க உதவும்.

இவ்வாறு, டாக்டர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us