ADDED : அக் 10, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; தமிழக மூத்த முதியோர் நலன் காக்கும் பாதுகாக்கும் பேரவை கிளை சார்பில், தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்ட விழா, நெகமம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நெகமம் பேரூராட்சி தலைவர் ஆர்த்தி தலைமை வகித்தார். கோவை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திக்கேயன் பேசினார்.
முதல்வரின் தாயுமானவர் திட்டம் வாயிலாக முதியோர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பூசாரிப்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தாளாளர் ரத்தினம் பேசினார்.
பேரூராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், வீனஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சின்னசாமி, கோவை மாவட்ட நெகமம் டி.வி.எஸ். டீலர் கணேசன், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் பேசினர். நெகமம் சண்முகவடிவேலின் தேனிசை நிகழ்ச்சி நடந்தது.