/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமுதாயக்கூடத்தில் மோட்டார் பழுது; தண்ணீர் தட்டுப்பாடால் பாதிப்பு
/
சமுதாயக்கூடத்தில் மோட்டார் பழுது; தண்ணீர் தட்டுப்பாடால் பாதிப்பு
சமுதாயக்கூடத்தில் மோட்டார் பழுது; தண்ணீர் தட்டுப்பாடால் பாதிப்பு
சமுதாயக்கூடத்தில் மோட்டார் பழுது; தண்ணீர் தட்டுப்பாடால் பாதிப்பு
ADDED : மே 18, 2025 10:18 PM
வால்பாறை ; வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டினால், நிகழ்ச்சி நடத்துவோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்டம், கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. இங்கு தினமும், பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
வால்பாறை பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சி, விழாக்கள் நடத்தப்படுகின்றன. திருமண நிகழ்ச்சிக்காகவும் சமுதாயநலக்கூடம் வாடகைக்கு விடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆனால், தண்ணீர் வராததால், சமையல் செய்ய முடியாத நிலையில் நிகழ்ச்சி நடத்துவோர் அதிருப்தியடைகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
மூகூர்த்த நாட்களில், சமுதாய நலக்கூடத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆனால், சமையல் பணி செய்யும் போது, திடீரென தண்ணீர் வரவில்லை. இதனால், கடைகளில் இருந்து தண்ணீர் விலைக்கு வாங்கி சமையல் செய்ய வேண்டியுள்ளது.
சமுதாய நலக்கூடத்தில் தடையின்றி தண்ணீர் வினியோகிக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சமுதாய நலக்கூடத்திற்கு போதிய அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு மோட்டார் திடீர் பழுதானதால் தேவையான அளவு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. விரைவில் பழுதான மோட்டார் சரிசெய்து, தடையில்லாமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.