/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சுவர் சேதமானதால் வாகன ஓட்டுநர்கள் அவதி
/
சுற்றுச்சுவர் சேதமானதால் வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜூன் 17, 2025 09:13 PM

வால்பாறை; வால்பாறை, அண்ணாதிடல் சுற்றுச்சுவர் சேதமானதால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில், நகராட்சிக்கு சொந்தமான அண்ணாதிடல் உள்ளது. இந்த திடலில் கோவில் விழாக்கள், கட்சி கூட்டம், போராட்டங்கள் நடக்கின்றன.
சமீப காலமாக இந்த திடலை யாரும் பயன்படுத்தாத அளவுக்கு, சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. இந்நிலையில், இந்தி திடலின் சுற்றுச்சுவர் பல்வேறு இடங்களில் இடிந்துள்ளது. இதனால், இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அண்ணாதிடலில், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய, மினி ஸ்டேடியம் விரைவில் அமைக்கப்படும். இதற்கான முதல் கட்ட ஆய்வு நிறைவடைந்துள்ளது.
புதிய ஸ்டேடியம் கட்டும் பணி நடக்கவிருப்பதால், திடலில் தற்காலிக பணி எதுவும் மேற்க்கொள்ளப்பட மாட்டாது' என்றனர்.