/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுமாறும் வாகன ஓட்டிகள்: வேகத்தடைக்கு வர்ணம் பூசுங்க
/
தடுமாறும் வாகன ஓட்டிகள்: வேகத்தடைக்கு வர்ணம் பூசுங்க
தடுமாறும் வாகன ஓட்டிகள்: வேகத்தடைக்கு வர்ணம் பூசுங்க
தடுமாறும் வாகன ஓட்டிகள்: வேகத்தடைக்கு வர்ணம் பூசுங்க
ADDED : நவ 21, 2025 06:56 AM

கோவை: கோவை, அவிநாசி ரோட்டில் ஹோப் காலேஜில் இருந்து திருச்சி ரோட்டுக்குச் செல்லும் முக்கிய பாதையாக காமராஜ் ரோடு உள்ளது. வெளியூர் செல்லும் பயணிகள், இரு சக்கர வாகனங்களில் வந்து, பஸ் ஏறிச் செல்கின்றனர்.
இதுதவிர, பள்ளிகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழித்தடத்தை பயன்படுத்துகின்றன. சமீபத்தில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டு, தற்போது அப்பகுதியில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வழித்தடத்தில் குறுக்கு ரோடுகள் ஏராளமாக இருக்கின்றன.
அவற்றில் இருந்து வரும் வாகனங்களும், பிரதான ரோட்டில் வரும் வாகனங்களும் ஒன்றோடொன்று மோதி, விபத்தை சந்திக்கின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், வரதராஜபுரத்தில் காந்தி நுாற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளி முன்பு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகளின் கண்களுக்குத் தெரியும் வகையில், அதன் மீது வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும். பள்ளி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்புள்ள வேகத்தடைகளில் வர்ணம் இல்லாததால், அருகில் வந்த பிறகே தெரிகிறது. வாகனங்களில் வேகமாக வந்து, பிரேக் போடுவதால், தடுமாற்றம் அடைகின்றனர். விபத்து, உயிர் பலி ஏற்படுவதற்கு முன், வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும். இதேபோல், பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள வேகத்தடைகளில் பூசிய வெள்ளை நிற வர்ணம் பாதி அழிந்து விட்டது; மீண்டும் வர்ணம் பூச மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

