ADDED : நவ 24, 2026 06:38 PM

அ நிறம் | அளவு
பூண்டி: தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், சுயம்பு வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். ஏழாவது மலை உச்சியில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். ஆனால் மலையேற பிப்., முதல் மே வரை மட்டுமே, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத்தன்று, ஏழாவது மலை உச்சியில் தீபமேற்ற, பல தலைமுறைகளாக கட்டளை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இன்று (நவ.,24) வழக்கமாக தீபமேற்ற செல்லும் உள்ளூர்வாசிகளுடன், வெளியூர் பக்தர்களும் மலையேற முயன்றனர்.
வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பக்தர்களும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் வெளியூர் பக்தர்கள் உட்பட 250 பேர் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
