/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மவுன்டன் பைக் சாம்பியன்ஷிப்' ஒட்டுமொத்த சாம்பியன் தமிழகம்
/
'மவுன்டன் பைக் சாம்பியன்ஷிப்' ஒட்டுமொத்த சாம்பியன் தமிழகம்
'மவுன்டன் பைக் சாம்பியன்ஷிப்' ஒட்டுமொத்த சாம்பியன் தமிழகம்
'மவுன்டன் பைக் சாம்பியன்ஷிப்' ஒட்டுமொத்த சாம்பியன் தமிழகம்
ADDED : பிப் 20, 2026 05:58 AM

கோவை:அருணாச்சல பிரதேசத்தில் 22வது தேசிய அளவிலான 'மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்' போட்டி கடந்த 12 முதல் 15ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் இருந்து 28 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கோவையில் இருந்து மட்டும், 21 பேர் பங்கேற்றனர். 18 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் சவுபர்னிகா இரு தங்கம் மற்றும் 'பெஸ்ட் வுமன் சைக்கிளிஸ்ட் ஆப் இந்தியா' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் எஸ்.டி.ஏ .டி.,யை சேர்ந்த ஸ்ருதிகா இரு தங்கமும், சன்மிதா இரு வெள்ளியும் வென்றுள்ளனர். மாணவர்கள் பிரிவில் அபிநவ் இரு தங்கமும், கிருஷ்ணா இரண்டு வெள்ளியும், சச்சின்தேவ் ஒரு வெண்கலமும் வென்றனர். 16 வயதுக்குட்பட்ட மாணவர்களில் ஆண்டனி ராஜ் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலமும், பிரனேஷ் ஒரு தங்கமும் தட்டியுள்ளனர்.
மாணவியர் பிரிவில் ஹாசினி இரு தங்கமும், ஸ்மிருதி ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர். 'டவுன் ஹில்' போட்டியில் திலோதமா ஒரு வெண்கலமும் வென்றார். சப் ஜூனியர் பிரிவில் ஒட்டுமொத்த ரன்னர்ஸ், ஜூனியர் பிரிவில் ஒட்டுமொத்த வின்னர்ஸ் என, தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
போட்டியில், 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் வென்று தமிழகத்துக்கும், கோவைக்கும் பெருமை சேர்த்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வருகை தந்த வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு சைக்கிளிங் சங்க பொது செயலாளர் விக்னேஷ்குமார், கோவை சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டி கவுரவித்தனர்.

