/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் யானைகள் நடமாட்டம்: தொழிலாளர்கள் பாதிப்பு
/
எஸ்டேட்டில் யானைகள் நடமாட்டம்: தொழிலாளர்கள் பாதிப்பு
எஸ்டேட்டில் யானைகள் நடமாட்டம்: தொழிலாளர்கள் பாதிப்பு
எஸ்டேட்டில் யானைகள் நடமாட்டம்: தொழிலாளர்கள் பாதிப்பு
ADDED : அக் 11, 2024 10:24 PM

வால்பாறை : வால்பாறையில், தென்மேற்குப்பருவ மழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால், கேரள வனப்பகுதியில் இருந்து வந்த, நுாற்றுக்கணக்கான யானைகள், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வால்பாறை எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. சில எஸ்டேட் பகுதியில் தேயிலை காட்டிலும் பகல் நேரத்தில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
குறிப்பாக, பன்னிமேடு, கருமலை, நடுமலை, உருளிக்கல், வில்லோனி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில், தேயிலை காட்டை ஒட்டியுள்ள துண்டு சோலைகளில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால் அந்தப்பகுதியில் தேயிலை பறிக்கும் பணிகள் பாதித்துள்ளன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு 'வாட்ஸ்ஆப்' வாயிலாக தினமும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தேயிலை காட்டில் முகாமிடும் யானைகள் பகல் நேரத்தில் ரோட்டை கடப்பதால், வாகனங்களை ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும்.
யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கூடாது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகளை துன்புறுத்தக்கூடாது.
இவ்வாறு, கூறினர்.