ADDED : நவ 29, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
கோவை: ஈரோடு–கரூர் இடைப்பட்ட ரயில்வே வழித்தடத்தில் நாளையும், 3ம் தேதியும் இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால், கோவை வழி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாலக்காடு டவுனில் இருந்து காலை 6:30க்கு திருச்சி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16844) கொடுமுடி ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தபின் திருச்சி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
கோவையில் இருந்து காலை 8:00க்கு புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) வழக்கமாக இயக்கப்படும் வடகோவை, பீளமேடு, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லாமல் போத்தனுார், பொள்ளாச்சி, பழநி வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
