ADDED : ஜூன் 25, 2026 02:18 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையத்தில், காங்., எம்.பி., ராகுலின், 56வது பிறந்த நாள் விழாவையொட்டி, அம்பராம்பாளையம் பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.
தெற்கு மாவட்ட முன்னாள் காங்., தலைவர் பகவதி, மாநில காங்., கமிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, கணேசன், மாவட்ட துணை தலைவர்கள் பங்கேற்றனர். பொள் ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நகர தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்னாள் இளைஞர் காங்., தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டன.
