/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்துறையின் சவால்கள் எம்.எஸ்.எம்.இ., கருத்தரங்கம்
/
தொழில்துறையின் சவால்கள் எம்.எஸ்.எம்.இ., கருத்தரங்கம்
தொழில்துறையின் சவால்கள் எம்.எஸ்.எம்.இ., கருத்தரங்கம்
தொழில்துறையின் சவால்கள் எம்.எஸ்.எம்.இ., கருத்தரங்கம்
ADDED : பிப் 17, 2026 07:14 AM
ஆவாரம்பாளையம்: கோவை எம்.எஸ்.எம்.இ., சங்கம் சார்பில், இன்றைய தொழில் நிலைமை, எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடந்தது.
ஆவாரம்பாளையம், கோ இண்டியா வளாகத்தில் நடந்த கருத்தரங்குக்கு, சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். நிகழ்வில், 'மத்திய பட்ஜெட்: நெருக்கடியும் தீர்வும்' என்ற தலைப்பில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் சுவாமிநாதன், 'வங்கி சேவையை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி'என்ற தலைப்பில் முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் நந்தகோபால், 'குறு, சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் கோவை கம்பரசர் இண்டஸ்ட்ரீஸ் சங்க தலைவர் ரவீந்திரன் பேசினர். சங்க செயலாளர் பாண்டியன், பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.