/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி கமிஷனர் புகார்; அ.தி.மு.க., கவுன்சிலர் ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு

ADDED : செப் 30, 2024 05:40 AM
மேட்டுப்பாளையம், : நகர்மன்ற கூட்டத்தில், டம்ளர் வீசிய விவகாரம் குறித்து, நகராட்சி கமிஷனர் கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்பது பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம், நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் தலைமையில் கடந்த 27 ம் தேதி நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்னை குறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அ.தி.மு.க., கவுன்சிலர் முகமது இப்ராஹிம் என்கிற சலீம் தண்ணீர் டம்ளரை தூக்கி வீசிய போது, அது எதிரே இருந்த மேஜையின் மீது பட்டு, நகர் மன்ற தலைவர் மற்றும் கமிஷனர் மேஜையின் மீது விழுந்தது. இதனால் அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அ.தி.மு.க., கவுன்சிலர் அரங்கில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் அமுதா, மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
மேட்டுப்பாளையம் போலீசார், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முகமது இப்ராஹிம், முகமது மீரான், சுனில் குமார், ராஜேஷ், தனசேகரன், குரு பிரசாத், மருதாசலம், கலைச்செல்வி, விஜயலட்சுமி ஆகிய 9 பேர் மீது, அரசு ஊழியர்களை மிரட்டுதல், பணிகள் செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட நான்கு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்துள்ளனர்.