/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் கவுன்சில் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
/
நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் கவுன்சில் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் கவுன்சில் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் கவுன்சில் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
ADDED : மே 06, 2025 11:33 PM

வால்பாறை: வால்பாறை நகராட்சியில், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மன்றக்கூட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி மன்றக்கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கமிஷனர் ரகுராமன், துணைத்தலைவர் செந்தில்குமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலை, 11:00 மணிக்கு மன்றக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கவுன்சிலர்கள் அவரவர் இருக்கையில் அமராமல், கூட்டத்தை புறக்கணித்து மன்ற அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கூறியதாவது:
கடந்த மாதம், 30ம் தேதி நடந்த மன்றக்கூட்டத்தில் தீர்மான நகல் முன் கூட்டியே வழங்கவில்லை என, விவாதம் செய்ததால், மன்றக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
நகராட்சியில் வளர்ச்சிப்பணி என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. மன்றக்கூட்டத்தில் கடந்த ஆறு மாதத்திற்கான வரவு செலவு கணக்கை சமர்ப்பித்து, அதற்கான நகலை வழங்க வேண்டும். அப்போது தான், கூட்டத்தில் பங்கேற்போம். அதுவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு, கூறினர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக, மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாத நிலையில், தலைவர், துணைத்தலைவர் ஆகியோர், கவுன்சிலர்களிடம் சமரசம் பேசினர். ஆனால், அவர்கள் வரவு, செலவு விபரத்தை வழங்கினால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம் என, தெரிவித்தனர். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் மன்றக்கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க.,வுக்கு எதிராக தி.மு.க.,!
வால்பாறை நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட, 19 பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., வி.சி., தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் நான்கு கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. கவுன்சிலர்கள் பாஸ்கர், உமாமகேஸ்வரி (தி.மு.க.,) உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மீதமுள்ள, 13 கவுன்சிலர்கள் மாலை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள், மாற்றுகட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.