/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சிப்பொருளானது அம்மா படகு இல்லம் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
/
காட்சிப்பொருளானது அம்மா படகு இல்லம் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
காட்சிப்பொருளானது அம்மா படகு இல்லம் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
காட்சிப்பொருளானது அம்மா படகு இல்லம் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
ADDED : ஆக 10, 2025 10:22 PM

வால்பாறை,; கழிவு நீர் தேங்கிய அம்மா படகு இல்லம், காட்சிப்பொருளாக மாறியதால், சுற்றுலாபயணியர் விரக்தியடைந்துள்ளனர்.
வால்பாறையின், இயற்கை அழகை கண்டு ரசிக்க, கொட்டும் மழையிலும் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வால்பாறையில் திரண்டுள்ளனர். கனமழையினால் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அம்மா படகு இல்லம், கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டதால், படகு சவாரியில் பயணம் செய்ய ஆர்வத்துடன் வரும் சுற்றுலாபயணியர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கழிவு நீர் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளதால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாபயணியர் கூறியதாவது: வால்பாறையில் தற்போது பருவமழை பெய்தாலும், சுற்றிப்பார்க்க மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அம்மா படகு இல்லம் மூடப்பட்டதால், ஏமாற்றமடைந்துள்ளோம். மழையின் காரணமாக நீர்பிடிப்பு பகுதியில் குளிக்க முடியாத நிலையில், இது போன்ற பொழுது போக்கு ஸ்தலங்களில் சுற்றுலாபயணியர் செல்ல அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக பூங்கா, படகுஇல்லம் போன்ற பகுதிகளுக்கு சென்று வரவும், சுற்றுலாபயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்துதர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அம்மா படகு இல்லத்தில் தேங்கி கிடந்த கழிவுகளை அகற்றும் பணியை தொடர்ந்து, அங்கு தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றப்பட்டன. கழிவு நீர் முழுமையாக வெளியேற்றிய பின்னர், சுற்றுலாபயணியர் நலன் கருதி, மழைக்கு பின் விரைவில் படகு இல்லம் மீண்டும் துார்வாரப்படும். மேலும் இங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்த பின்னர் படகு சவாரி மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படும்' என்றனர்.