sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடுக்குமாடி குடியிருப்பில் துணிகரம்

/

 மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடுக்குமாடி குடியிருப்பில் துணிகரம்

 மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடுக்குமாடி குடியிருப்பில் துணிகரம்

 மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடுக்குமாடி குடியிருப்பில் துணிகரம்

1


ADDED : மார் 07, 2026 02:19 AM

Google News

ADDED : மார் 07, 2026 02:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக வசித்த மூதாட்டியை கொன்று, நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, நேபாள நாட்டை சேர்ந்த வேலைக்கார பெண்ணை போலீசார் தேடுகின்றனர்.

கோவை, ராமநாதபுரத்தில், 'பார்சன் அப்பார்ட்மென்ட்' என்ற பெயரில், 100க்கும் மேற்பட்ட தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இங்குள்ள தனி வீட்டில், கஸ்துாரி, 80, என்பவர் வசித்தார். இவருக்கு ராம்குமார், 50, என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

ஆயுர்வேத டாக்டராக பணியாற்றும் ராம்குமார், சில மாதங்களுக்கு முன் வியட்நாம் நாட்டிற்கு சென்றார். இதனால், தாயை கவனிக்க நேபாளத்தை சேர்ந்த சுர்ஜா ரோக்யா, 40, என்ற பெண்ணை பணிக்கு அமர்த்தினார்.

இந்நிலையில், கோவை, டி.வி.எஸ்., நகரில் வசிக்கும் மகள், நேற்று காலை தாய்க்கு போன் செய்தும், அவர் எடுக்காததால், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு தெரிவித்து, நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அவர் பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் துணியால் அடைக்கப்பட்டு, படுக்கையில் கஸ்துாரி சடலமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், கஸ்துாரியின் மகளி டம் தெரிவித்தார்.கோவை, ராமநாதபுரம் போலீசார் விசாரித்தனர்.

கஸ்துாரியின் வாயை துணியால் அமுக்கி, மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அவரது தங்க செயின், கம்மல் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

கஸ்துாரியின் மொபைல் போன், வீட்டிற்கு பின்புறம் வீசப்பட்டிருந்ததும், பணிப்பெண் சுர்ஜா ரோக்யா மாயமானதும் தெரிந்தது.

மூ தாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்து அவர் தப்பி இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். சுர்ஜாவை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us