ADDED : செப் 16, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவர நோயியல் துறை சார்பில், கோவை கலைமகள் கலை, அறிவியல் கல்லுாரியின் 50 மாணவர்களுக்கு, ‘காளான் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுதல்’ குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் ஒருங்கிணைந்த காளான் மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன், பயிற்சி நடந்தது.
துறைத்தலைவர் அங்கப்பன் பேசுகையில், ‘‘செங்குத்து இடவசதியைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த பரப்பில் அதிக வருமானம் தரக்கூடிய ஒரு நவீன தோட்டக்கலை தொழிலாக காளான் வளர்ப்பில் ஈடுபடலாம். இது மாணவர் சமூகத்தின் சமூக -பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்,’’ என்றார்.
பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் சாந்தி, பேராசிரியர் திரிபுவனமாலா, உதவி பேராசிரியர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
