/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை; மகிழ்ச்சியை பகிர்ந்த இஸ்லாமியர்கள்
/
பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை; மகிழ்ச்சியை பகிர்ந்த இஸ்லாமியர்கள்
பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை; மகிழ்ச்சியை பகிர்ந்த இஸ்லாமியர்கள்
பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை; மகிழ்ச்சியை பகிர்ந்த இஸ்லாமியர்கள்
ADDED : மார் 31, 2025 09:48 PM

- நிருபர் குழு -
இஸ்லாமியர்கள் ஈகைத்திருநாளாம், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஒரு மாதம் நோன்பு வைத்து, பெருநாளை நேற்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பெரிய பள்ளிவாசல் சார்பில், காலை, 9:00 மணிக்கு மேல் சிறப்பு தொழுகை, தேர்நிலையம் அருகேநேற்று நடந்தது.
இமாம் மவுலவி ஹாபிழ் முஹம்மது மன்சூர் ரஹ்மானி ஹஜ்ரத் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். இதில், திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.
கோட்டூர் ரோடு, சீனிவாசபுரம், அம்பராம்பாளையம், சூளேஸ்வரன்பட்டி, குமரன்நகர், பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, மற்றும் மாப்பிள்ளைகவுண்டன்புதுார், கோவிந்தனுார் உள்ளிட்டகிராமப்புறங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு கூட்டுத்தொழுகை நடந்தது.
தொழுகை முடிந்ததும், ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதன்பின், பலரும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
* வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நேற்று முன்தினம் முத்தவல்லி கமாலுதீன் தலைமையில் இப்தார் விருந்து நடந்தது.
ஆனைமலை ஹில்ஸ் முஸ்லீம் ஜாமாத் சார்பில், ரம்ஜான் பண்டிகையான நேற்று காலை, 9:30 மணிக்கு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், கவுரவ தலைவர் அமீது, தலைவர் குஞ்சாலி, செயலாளர் யூசப் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் சோலையாறு, சின்கோனா, உருளிக்கல், வாட்டர்பால்ஸ், அட்கட்டி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை சிறப்பாக நடந்தது.
* உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகைகள் நடந்தன. உடுமலை பூர்வீக பள்ளிவாசலில் தொழுகையில் நுாற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இமாம் மவுலவி முஹம்மது இஸ்மாயில் கைரி, ரம்ஜான் சிறப்பு குறித்து விளக்கினார். தலைமை இமாம் மவுலி அல்ஹாபிள் முஹம்மது யூசுப், சிராஜி ஹள்ரத் ஆகியோர் தொழுகை நடத்தி வைத்தனர்.
பள்ளிவாசல் தலைவர் ஹாஜி ேஷக் தாவூத், செயலாளர் அல்ஹாஜ் தாஹிர் பாஷா, பொருளாளர் உமர்பரூக் மற்றும் நிர்வாக குழுவினர் பங்கேற்றனர்.
உடுமலை குட்டைத்திடல் ஜாமியா பள்ளிவாசலில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. தலைவர் பஹதுார்ஹான், தலைமை இமாம் அப்துல்லாஹ் அன்வாரி, துணை இமாம் முஹம்மதுயூசுப் ஹசனி மற்றும் ஜமாத்தார்கள் பங்கேற்றனர்.
தொழுகை நிறைவடைந்ததும், ரம்ஜான் ஊர்வலம் நடந்தது. இதே போல், உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலுள்ள பள்ளிவாசல்களில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.