/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முத்தநாடு அரசு பள்ளிக்கூட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
முத்தநாடு அரசு பள்ளிக்கூட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முத்தநாடு அரசு பள்ளிக்கூட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முத்தநாடு அரசு பள்ளிக்கூட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : நவ 20, 2025 01:02 AM
காரமடை: காரமடை அருகே முத்தநாடு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கோவை மாவட்டம் காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், குன்னூர் அருகே முத்தநாடு பகுதியில் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர். இதில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு, அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜூ என்ற ஆசிரியருக்கு நூற்றாண்டு விழாவினை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ராஜூவின் மகன் துரைராஜ் கலந்துக் கொண்டு தனது தந்தையின் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.
மேலும், ஆசிரியர் ராஜுவால் தான் முத்தநாடு பள்ளி மாணவர்கள் இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு துறைகளில் உயர் பொறுப்பில் பதவி வகித்து வருகின்றனர். முத்தநாடு என்ற பகுதியின் வளர்ச்சிக்கு ஆசிரியர் ராஜு மிகப்பெரிய தூண் என்று முன்னாள் மாணவர்கள் புகழாரம் சூட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு முத்தநாடு மக்கள் நல சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் இருதயராஜ், பொருளாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். முத்ததநாடு பகுதி மக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
----

