/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடியில் மண் குளிர்ந்தது போல மனம் குளிரணும் தாயே!
/
ஆடியில் மண் குளிர்ந்தது போல மனம் குளிரணும் தாயே!
ADDED : ஜூலை 25, 2025 10:16 PM

ஆடிமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் முன்புள்ள பீடத்தில், உப்பு கொட்டி நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள், கூழ் வழங்கி வழிபாடு செய்தனர்.
கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு அபிேஷகம், மலர் மாலைகளால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திருமகிழ்ந்த வள்ளி தாயார் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பாலாதிருப்புரா சுந்தரிதேவி கட்கமாலா சிறப்பு பூஜை நடைபெற்றது. உலக நன்மை, விவசாயம் செழிக்க வேண்டும் என பூஜை நடைபெற்றது. திரளான பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
வால்பாறை வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல்கள் வழங்கப்பட்டன.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் நேற்று காலை, 11:00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு, சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவில் காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
உடுமலை உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் நடந்த ஆடிவெள்ளி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விரதம் இருந்து, வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். கூழ் ஊற்றி, அன்னதானம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
- நிருபர் குழு -

