/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்
/
கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்
கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்
கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்
ADDED : ஜன 01, 2025 05:17 AM
கோவை : ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த கிரிக்கெட் போட்டியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி 'டிராபி'யை வென்றது.
பச்சாபாளையம் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில், 'எஸ்.ஆர்.ஐ.டி., டிராபி' கிரிக்கெட் போட்டி பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே நடந்தது.
இதில், சங்கரா பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் உட்பட ஏழு கல்லுாரி அணிகள், 20 ஓவர் போட்டியில் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுக்கு, 149 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியினர், 20 ஓவர்களில், 10 விக்கெட்டுக்கு, 97 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மூன்றாம் இடத்துக்கான போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியும், சங்கரா பாலிடெக்னிக் அணியும் விளையாடின.
பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., அணி, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுக்கு, 125 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சங்கரா அணியினர், 20 ஓவர்களில், 10 விக்கெட்டுக்கு, 98 ரன்கள் எடுத்தனர்.
நாச்சிமுத்து கல்லுாரி, ராமகிருஷ்ணா கல்லுாரி, பி.எஸ்.ஜி., கல்லுாரி ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், உடற்கல்வி இயக்குனர் வேலுசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.