ADDED : ஆக 16, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பவுர்ணமி நாக கன்னி அம்மன் கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.
பொள்ளாச்சி, மார்க்கெட் ரோடு, ரயில்வே காலனியில் உள்ள பவுர்ணமி ஸ்ரீ நாக கன்னியம்மன் கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, நாக கண்ணியம்மனுக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்,அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
