/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லிசெட்டிபாளையம் குளத்தில் ஆய்வு; அத்திக்கடவு திட்ட பொறியாளர் உறுதி
/
நல்லிசெட்டிபாளையம் குளத்தில் ஆய்வு; அத்திக்கடவு திட்ட பொறியாளர் உறுதி
நல்லிசெட்டிபாளையம் குளத்தில் ஆய்வு; அத்திக்கடவு திட்ட பொறியாளர் உறுதி
நல்லிசெட்டிபாளையம் குளத்தில் ஆய்வு; அத்திக்கடவு திட்ட பொறியாளர் உறுதி
ADDED : செப் 16, 2025 10:25 PM
அன்னுார்; வறண்டு கிடக்கும் நல்லிசெட்டி பாளையம் குளத்தை ஆய்வு செய்வதாக அத்திக்கடவு நிர்வாக பொறியாளர் உறுதி அளித்தார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அன்னுார் ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட குட்டைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனினும், நல்லிசெட்டி பாளையத்தில் உள்ள 12 ஏக்கர் குளம் நீர் இல்லாமல் வறண்டு மைதானம் போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து நேற்று கொங்கு மண்டல விவசாயிகள் நல சங்கத் தலைவர் முருகசாமி மற்றும் விவசாயிகள் அவிநாசி சென்றனர்.
அங்கு அத்திக்கடவு திட்ட அலுவலகத்தில் நிர்வாக பொறியாளரை சந்தித்து கூறுகையில், ''ஆய்வு செய்த போது தவறு நடந்துள்ளது. 12 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்திற்கு ஒன்றேகால் இன்ச் அளவுள்ள குழாய் மட்டுமே அத்திக்கடவு நீர் விநியோகத்துக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த குழாயில் இரவு பகலாக 24 மணி நேரமும் அத்திக்கடவு நீர் வந்தாலும் குளம் நிரம்ப பல மாதங்கள் ஆகும். எனவே இந்த குழாயை அகற்றிவிட்டு அதிக விட்டமுள்ள குழாய் பொருத்த வேண்டும். அதிக அளவில் நீர் விநியோகிக்க வேண்டும்.
நல்லி செட்டிபாளையத்தைச் சுற்றி அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளன. நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு கீழ் சென்று விட்டது.
இங்கு குளத்தில் அத்திக்கடவு நீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பரப்பு அதிகரிக்கும்,' என்றனர்.
நிர்வாக பொறியாளர்பதிலளிக்கையில், ''விரைவில் அந்தக் குளத்தை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்வார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று உறுதியளித்தார்.