/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதா? வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதா? வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதா? வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதா? வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 10, 2024 11:39 PM
பொள்ளாச்சி;'இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். பட்டியலில் விடுபட்டு இருந்தால் 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்,' என பொள்ளாச்சி சப் - கலெக்டர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி கடந்த ஜன., மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில், ஆண்கள், 1,07,249 பெண்கள், 1,17,658, மற்றவர்கள், 39 என மொத்தம், 2,24,946 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதியில், ஆண்கள், 1,63,894, பெண்கள், 1,71,498, மற்றவர்கள், 44 என மொத்தம், 3,35,436 பேர் உள்ளனர்.
வால்பாறை (தனி) தொகுதியில், ஆண்கள், 93,443, பெண்கள், 1,03,038, மற்றவர்கள், 22 என மொத்தம், 1,96,503 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
தற்போது, லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடிகள் ஆய்வு, வாக்காளர்களிடம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என சப் - கலெக்டர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜன., 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜன., 22ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் விடுபடாமல் உள்ளதா என, உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்காளர்கள் தங்களது பெயர், சரியான புகைப்படத்துடன் உள்ளதை, சப் - கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் தங்களது பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வாயிலாக சரிபார்த்துக்கொள்ளலாம்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின், 'Voters Helpline Mobile App' மற்றும் https://voters.eci.gov.in என்னும் இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது, தேர்தல் ஆணையத்தின் இலவச அழைப்பு எண், 1950 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தங்களது பெயர் மற்றும் இதர விபரங்களை குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் விடுபடாமல் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரிடமோ, தாலுகா அலுவலகத்திலோ அல்லது இணைய வழியில் வரும், 16ம் தேதி வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

